போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலம் மீட்பு


போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலம் மீட்பு
x

பாளையங்கோட்டையில் போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜூடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை அறிந்த அவர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்டு புகார் செய்தார். அதன் மீது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடியாக விற்பனை செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர். நேற்று அந்த இடத்துக்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நிலத்தின் உரிமையாளரிடம் வழங்கினார்.


Next Story