வாலிபர் இழந்த ரூ.2.90 லட்சம் மீட்பு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபர் இழந்த ரூ.2.90 லட்சம் மீட்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லையை அடுத்த சுத்தமல்லி பாரதியார் நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 27). இவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இணையதளத்தில் வெளியான தகவலை நம்பி, அதில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரப்படாததால், தன்னிடம் மோசடியாக பணம் வாங்கப்பட்டதை அறிந்த செல்லத்துரை, இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி, செல்லத்துரைக்கு சொந்தமான ரூ.2.90 லட்சத்தை மீட்டனர். அந்த பணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், செல்லத்துரையிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story