வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.65 ஆயிரம் மீட்பு


வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.65 ஆயிரம் மீட்பு
x

கொளத்தூரில் வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.65 ஆயிரம் மீட்கப்பட்டது.

சேலம்

கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 25). இவருக்கு முகநூல் மூலம் நண்பர் ஒருவர் அறிமுகமானார். கடந்த மாதம் அவர் மூர்த்தியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றுவதாகவும், எங்களது நிறுவனத்தில் உனக்கு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். இதை நம்பிய மூர்த்தி ரூ.85 ஆயிரத்தை அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதுகுறித்து மூர்த்தி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம், சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் மூர்த்தியிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.65 ஆயிரம் திரும்ப மீட்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் கூறும்போது, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இதுவரை 507 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 71 புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மோசடியாக பெறப்பட்ட பல்வேறு மாநில வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 898 முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கில் வரும் போலி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றார்.


Next Story