பெண் ராணுவ வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம்


பெண் ராணுவ வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம்
x

காட்பாடியில் பெண் ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாமில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

வேலூர்

காட்பாடியில் பெண் ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாமில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

ஆள் சேர்ப்பு முகாம்

ராணுவத்துக்கு அக்னிவீர், அக்னிவீர் சிப்பாய் தொழில்நுட்பம் (பெண் ராணுவ காவல் பணி), உதவி செவிலியர், உதவிசெவிலியர் (கால்நடை), மதபோதகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கும் முகாம் கடந்த 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆள்சேர்ப்பு முகாமில் எவ்வித தனிநபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

விளையாட்டு மைதான பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மைதானம் முழுவதையும் ராணுவ வீரர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

பெண்கள் குவிந்தனர்

இந்த நிலையில் ராணுவத்திற்கு பெண் ராணுவ வீரர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆள் சேர்க்கும் முகாம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். சான்றிதழ் ஆவணங்களை குறிப்பிட்டபடி கொண்டு வந்த பெண்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் நேற்று முன்தினமும், நேற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெண்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.


Next Story