ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம்


ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம்
x

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வுக்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 550 பேர் விண்ணப்பங்கள் பெற்று சென்ற நிலையில் 250 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பித்திருந்தனர். இதில் 202 ஆண்களும், 48 பெண்களும் ஆவார்கள். இந்த நிலையில் ஆட்கள் தேர்வுக்கான முகாம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகராஜ், ஊர்க்காவல் படை தளபதி அழகுமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story