திருச்சி மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
திருச்சி மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
திருச்சி
திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர ஊர்க்காவல்படையில் சேர்வதற்கான ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் 28 காலிப் பணியிடங்களுக்கு 94 ஆண்களும், 19 பெண்கள் என மொத்தம் 113 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு எடை, உயரம், சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்டன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து போலீசாருடன் சேர்ந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
Related Tags :
Next Story