பழனி அருகே ரூ.66 லட்சம் கோவில் நிலங்கள் மீட்பு


பழனி அருகே ரூ.66 லட்சம் கோவில் நிலங்கள் மீட்பு
x

பழனி அருகே ரூ.66 லட்சம் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி தாலுகா மேல்கரைப்பட்டி பகுதியில் அங்காளம்மன் கோவிலுக்கு செந்தமான 14.94 ஏக்கர் நிலம், பொருளூர் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 15.69 ஏக்கர் நிலம், கொத்தயம் ஆழ்வார் பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 23.67 ஏக்கர் நிலம் என மொத்தம் 54.3 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றி கொண்டனர்.

மேலும் அங்கு கோவிலுக்கு சொந்தமான நிலம் என்றும், அதனை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தினர். மீட்கப்பட்ட கோவில் நிலம் ரூ.66 லட்சம் மதிப்புடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story