ரெட்டியார்பட்டி ஏரி நிரம்பியது


ரெட்டியார்பட்டி ஏரி நிரம்பியது
x

உப்பிலியபுரம் அருகே ரெட்டியார்பட்டி ஏரி நிரம்பியது

திருச்சி

உப்பிலியபுரம், ஆக.27-

உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சியில் ரெட்டியார்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம், 120 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகிறது. தற்போது, பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரி நிரம்பியது. இந்த ஏரி தண்ணீர் எரகுடி பகுதிக்கும், மதகு வழியாக திறக்கப்படும் தண்ணீர் தா.பேட்டை ஒன்றியம், கரிகாலி மற்றும் கொளஞ்சிப்பட்டி குளங்களுக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story