பூத்து குலுங்கும் ரெட்லீப் மலர்கள்


பூத்து குலுங்கும் ரெட்லீப் மலர்கள்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பூத்து குலுங்கும் ரெட்லீப் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிழல் தரும் மரங்கள், அரியவகை மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டன. இதனை தற்போது வரை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் பாதுகாத்து பராமரித்து வருகிறது. குறிப்பாக ரெட் லீப் என அழைக்கப்படும் சிவப்பு வண்ணத்தில் பூக்கும் இலை மலர்கள், சாலையோரங்கள், தேயிலை தோட்டங்களில் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த மலர்கள் சீசன் நிறைவடைந்த பின்னர் மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறிவிடும் தன்மை கொண்டது.

இந்த அரியவகை மலர்கள், கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் ஏராளமாக காணப்படுகின்றன. பச்சை பசேல் என காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பயிரிடப்பட்டு உள்ள மலர் நாற்றுக்களில் சீசன் காரணமாக மலர்கள் பூத்து, சிவப்பு கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கிறது. செடிகளில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.


Next Story