துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு

துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த குறை தீர்க்கும் முகாமில்  130 மனுக்களுக்கு தீர்வு
x

துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை,

துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

தக்கலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது தீர்வு காண தக்கலை அருகே அழகிய மண்டபத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பெட்டிசன் மேளா என்ற குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமை தாங்கினார்.

இதில் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், சேக் அப்துல்காதர், பாலமுருகன், எழில் அரசி மற்றும் சப் -இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு புகார் மனுக்கள் குறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி, 130 மனுக்களுக்கு தீர்வு கண்டனர்.

Next Story