மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
சேலம்
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்படும். கடந்த 12-ந் தேதி இரவு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.45 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து 145 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story