பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
பழனியில், பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் முதுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. அதன்படி பழனி வட்டாரத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பழனி சண்முகபுரம் நகராட்சி பள்ளியில் பயிற்சி நடந்தது. இதற்கு முதுநிலை விரிவுரையாளர் நிர்மலாதேவி தலைமை தாங்கினார். பயிற்சியாளர்கள் நாகராஜன், கவுதம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில், ஆசிரியர்-மாணவர்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, உடல்நலம், மனநலத்தை பாதுகாப்பது, பள்ளி வளாகம், வகுப்பறையில் சுகாதாரத்தை பேணுவது குறித்து விளக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பழனி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story