தூத்துக்குடியில் குளிர்பதன கிட்டங்கி வாடகைகுறித்த ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில்குளிர்பதன கிட்டங்கி வாடகை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கியை வாடகை மற்றும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குளிர்பதன கிட்டங்கி பங்குதாரர் மற்றும் வியாபாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்மை வணிக துணை இயக்குனர் முருகப்பன் தலைமை தாங்கினார். நெல்லை விற்பனைக்குழு செயலாளர் எழில் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குளிர்பதன கிட்டங்கியின் உட்கட்டமைப்பு, சிறப்பு அம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் வாடகை நிர்ணய தொகை, குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வேளாண்மை உதவிஇயக்குனர் அலாய் பெர்னாண்டோ, வேளாண் அலுவலர்கள் பாலமுருகன், ரத்தினசிவா, செல்வக்குமார், விற்பனை கூட கண்காணிப்பாளர் தண்டாயுதபாணி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தனியார் குளிர்பதன கிட்டங்கி பங்குதாரர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.