வீட்டு வசதி திட்டங்கள் தொடர்பானகுறைகளை தெரிவிக்க கோரிக்கை பெட்டி


வீட்டு வசதி திட்டங்கள் தொடர்பானகுறைகளை தெரிவிக்க கோரிக்கை பெட்டி
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வசதி திட்டங்கள் தொடர்பான குறைகளை தெரிவிக்க அலுவலகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

நெல்லை வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எட்வின்சுந்தர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர். இதனால் நெல்லை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக இன்று (சனிக்கிழமை) முதல் கோரிக்கை பெட்டி வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அலுவலக வேலை நாட்களில் வீட்டுவசதி தொடர்பான மனுக்களை அந்த பெட்டியில் போட்டு தீர்வு பெறலாம். எனவே மக்களின் குறைதீர்க்க முதல்வர் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story