பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம்


பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தொடர்பான   ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் பசுமை வீடு பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்குவது தொடர்பாகவும், அவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.பின்னர் கலெக்டர் கூறியதாவது:-நிலமற்ற பயனாளிகளுக்கு ஊராட்சியில் உள்ள நத்தம் புறம்போக்கு மற்றும் தகுதியான இடங்களை கண்டறிந்து, அதில் தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனங்களுக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு தடையின்மை சான்று பெற்றிடவும், கூட்டு பட்டா உள்ளவர்களுக்கு தனி நபர் பட்டா பெற்று உடனடியாக உரிய ஆவணங்களுடன் மின்னனுமதி செய்திட வேண்டும்.

பட்டா வழங்க நடவடிக்கை

இல்லையென்றால் கிராம ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர்கள் ஆகியோருடன் பயனாளிகளை சந்தித்து மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சமுக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு 2011-ல் இடம் பெற்றுள்ள 4 ஆயிரத்து 467 நிலமற்ற பயனாளிகளுக்கும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட ஏதுவாக, பட்டா வழங்கிட அதிக எண்ணிக்கையில் உள்ள 25 ஊராட்சிகளின் கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் ஆகியோருக்கு பணிக்குழு கூட்டம் நடந்தது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் யுரேகா மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story