எலி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பழனியில் எலி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்
பழனி வட்டார வேளாண் துறை சார்பில், ஆயக்குடியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி தலைமை தாங்கினார். வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சத்தியஷீலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி மீனாகுமாரி பேசினார்.
உதவி பேராசிரியர் சத்தியஷீலா, பயிர் சாகுபடியில் எலி மேலாண்மை செய்வது, படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார். அட்மா திட்ட உதவி மேலாளர் குணசுந்தரி, அட்மா திட்டம், அதன் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள், உழவன் செயலி ஆகியவை பற்றி பேசினார். முடிவில் உதவி வேளாண் அலுவலர் தண்டபாணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story