குடிநீர் தர பரிசோதனை குறித்துசுகாதார மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


குடிநீர் தர பரிசோதனை குறித்துசுகாதார மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே குடிநீர் தர பரிசோதனை குறித்து சுகாதார மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

தேனி அருகே முல்லைநகரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஜல் ஜீவன் திட்டம் சார்பில், கிராம குடிநீர் மற்றும் கிராம சுகாதார மேலாண்மைக்குழு பெண் உறுப்பினர்களுக்கு குடிநீர் தர பரிசோதனை குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில், தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 90 பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குடிநீர் தர பரிசோதனை செய்யப்பட்டு, அதுதொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிக்கு தேனி வட்டார வளர்ச்சி அலுவலர் கனி தலைமை தாங்கினார். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் ராஜேஷ், உதவி நிர்வாக பொறியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர் பரிசோதனை பயிற்றுனர்கள் சுதாகர், சத்யா, சதீஷ்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முன்னதாக வட்டார திட்ட மேலாளர் கலைவாணி வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story