வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்


வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
x

வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர்

வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பணியாற்றும் பிரின்ஸ், கலெக்டர் அலுவலக சிறுசேமிப்பு துறை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறுசேமிப்பு அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சத்தியவதி, உதவி இயக்குனர் ஊராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய திருநாவுக்கரசி சாத்தூர் யூனியன் (கி.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

சாத்தூர் - நரிக்குடி

சாத்தூர் யூனியனில் பணியாற்றிய ஜி.வாசுகி (கி.ஊ), நரிக்குடி யூனியன் (கி.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

நரிக்குடி யூனியன் (கி.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ராஜசேகரன், நரிக்குடி யூனியன் (வ.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story