மண்டல விளையாட்டு போட்டி
மண்டல விளையாட்டு போட்டிகள் நடந்தது
தென்காசி
வாசுதேவநல்லூர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உறுப்பு கல்லூரி மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளை கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி மாணவிகள் எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர். மாணவர்களுக்கான கிாிக்கெட் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தனர். தனித்திறன் போட்டியில் மாணவர் தினேஷ் ராகுல் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை எஸ்.தங்கப்பழம் குழுமத்தின் செயலாளர் முருகேசன் பாராட்டினார்.
Related Tags :
Next Story