பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அம்மாபேட்டை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், பெருந்துறை, அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 ஆயிரத்து 778 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ரூ.2 கோடி

பருத்தி ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 571-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்து 50-க்கும் விற்பனை ஆனது.

பருத்தி மொத்தம் ரூ.1 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 931-க்கு ஏலம் போனது.

கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, கொங்கணாபுரம், பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பருத்தியை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.


Next Story