அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பருத்தி 7 ஆயிரத்து 569 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்து 62-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

கொப்பரை தேங்காய்

தேங்காய் 8 ஆயிரத்து 634 கொண்டு வரப்பட்டன. இதில் சிறிய தேங்காய் ஒன்று 4 ரூபாய் 26 காசுக்கும், பெரிய தேங்காய் ஒன்று 14 ரூபாய் 66 காசுக்கும் என மொத்தம் 82 ஆயிரத்து 902 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கொப்பரை தேங்காய் 90 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7ஆயிரத்து 719-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 612-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 421-க்கு விற்பனை செய்யப்பட்டன.

எள் 29 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 269-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.11 ஆயிரத்து 669-க்கும் ஏலம் போனது. ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் விவசாய விளைபொருட்களை ஏலம் எடுத்துச் சென்றனர்.


Next Story