மறுவாழ்வு மைய உரிமையாளர் தற்கொலை


மறுவாழ்வு மைய உரிமையாளர் தற்கொலை
x

மறுவாழ்வு மைய உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சி உறையூர் லிங்காநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 38). இவர் சன்ரைஸ் என்ற மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த முத்துக்குமரன் சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story