ஒத்திகை நிகழ்ச்சி
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வதுநாளாக கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நேற்றுமுன்தினம் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் படகு மூலம் கடலில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக போலீசார் கடலில் படகு மூலம் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது
மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீஸ்துறைக்கு தகவல் தர வேண்டும் என எச்சரித்தனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் ஆய்வு செய்தனர்.