கிருஷ்ணகிரியில் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சி


கிருஷ்ணகிரியில் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழாவையொட்டி போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழாவையொட்டி போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

ஒத்திகை நிகழ்ச்சி

விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story