திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் கைது


திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் கைது செயயப்பட்டனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம் அருகேயுள்ள எம்.கோட்டூர் பகுதியில் மின்சார ஒயர்களை திருடிய எம்.கோட்டூர் ஆர்.சி தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் மாரீஸ்வரன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 700 அடி நீளமுள்ள மின் ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சன்னது புதுக்குடி டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் மாசாணமுத்து (25) என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடிய கங்கைகொண்டான் தடிவீரன் மகன் மந்திர மூர்த்தி (21) என்பவரை கயத்தாறு ேபாலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

இதேபோன்று நேற்று முன்தினம் ஏரல் பஸ்நிலையத்தில் தொட்டியன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (38) என்பவரிடம் ஆயிரம் ரூபாயை திருடிய, தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த பெத்தையா மகன் கார்த்திக் (32) என்பவரை ஏரல் போலீசார் கைது செய்தனர்.


Next Story