வேடசந்தூர் அருகே விவசாயியை தாக்கிய உறவினர் கைது


வேடசந்தூர் அருகே விவசாயியை தாக்கிய உறவினர் கைது
x
தினத்தந்தி 1 April 2023 2:15 AM IST (Updated: 1 April 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே விவசாயியை தாக்கிய உறவினர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 25). விவசாயி. இவரது அக்காள் ராணி. இவருக்கும், அவரது கணவரின் அண்ணனான வெள்ளையன் என்ற ஒச்சாத்தேவர் (45) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த முனியப்பன், வெள்ளையனிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி முனியப்பன், தனது நண்பரான அஜித்துடன் மோட்டார் சைக்கிளில் வடமதுரை அருகே லக்கம்பட்டி காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்து வெள்ளையன் தகராறு செய்தார். மேலும் முனியப்பனை கல்லால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் முனியப்பன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தார்.


Next Story