மாணவரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
காதல்காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாணவியின் தரப்பினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல்காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாணவியின் தரப்பினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர் தற்கொலை
திருப்பத்தூர் ஜின்னா ரோட்டில் வசிப்பவர் எசானுல்லாகான். நகைப் பெட்டி தயார் செய்து வருகிறார். இவரது மகன் அசதுல்லா கான் (வயது 18). திருப்பத்தூரில் உள்ள பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைசெய்து கொண்டார். அப்போது வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் அவரது செல்போனை பார்த்தபோது, பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மணவியின் அண்ணன், அசதுல்லாகானை அடித்ததாக கூறப்படுகிறது. அசதுல்லாகான் தற்கொலை செய்வதற்கு முன், தனது நண்பர்களுடன் செல்போனில் பேசியது சமூக வலைதளங்களில் பரவியது.
போலீஸ் நிலையம் முற்றுகை
அதில் அந்த மாணவிதான் முதலில் கடிதம் கொடுத்ததாகவும், என்னுடைய அப்பா, அம்மாவின் மரியாதையை காப்பாற்ற வேண்டும். அதற்கு நான் சாவதை தவிர வேறு வழியில்லை. நான் இறந்த பிறகு எனது பெற்றோரிடம் இந்த உண்மையை கூற வேண்டும் எனவும், அவளுடைய அண்ணன் என்னை அடித்து கொன்று புதைத்து விடுவார் என்று பேசிய உள்ளார். இதை டவுன் போலீசில் கொடுத்து புகார் அளித்தனர்.
போலீசார் விசாரிப்பதாகக் கூறி காலம் தாழ்த்தி வந்ததாக கூறி நேற்று டவுன் போலீஸ் நிலையத்தை மாணவரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அதே நேரத்தில் மாணவியின் உறவினர்களும் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹேமாவதி இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மீண்டும் விசாரணை நடத்துவதாக கூறி அனுப்பி வைத்தார்.