கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்


கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
x

கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெப்பக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் அழகுமுத்துபாண்டி(வயது 19). கல்லூரி மாணவரான இவர் தட்டான்குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். இதையடுத்து அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறுப்பட்ட நிலையில், அவரது உடலை விராலிமலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அழகுமுத்துபாண்டியின் உறவினர்கள் நேற்று அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story