மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 May 2023 9:37 PM IST (Updated: 6 May 2023 10:28 PM IST)
t-max-icont-min-icon

மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும்.

இந்த நிலையில் ஜவ்வாதுமலை மற்றும் கலசபாக்கம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஜவ்வாதுமலை பகுதியில் இருந்து மிருகண்டா நதி அணைக்கு சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு உள்ளன. இதனால் அணையின் நீர்மட்டம் 20 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன.

தற்போது அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அணையின் அருகே உள்ள சீனாந்தல், காந்தபாளையம், ஆதமங்கலம் புதூர், கெங்கலமகாதேவி, கேட்டவரம்பாளையம், அருணகிரிமங்கலம், சிருவள்ளூர், எலத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story