பாசனத்திற்காக பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறப்பு
சிதம்பரம் அருகே பாசனத்திற்காக பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
புவனகிரி:
சிதம்பரம் அருகே பாசிமுத்தான் ஓடையில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். புவனகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் மனோகர் கலந்து கொண்டு பாசிமுத்தான் ஓடையில் தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அரவிந்தன், சண்முகம், கோபி, பொதுப்பணித்துறை ஊழியர்கள், தி.மு.க. நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறப்பால் கீழமூங்கிலடி, அனுவம்பட்டு, பள்ளிப்படை, தில்லைநாயகபுரம், கோவிலம்பூண்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.