கூடலூர் அருகே வனத்துறை சார்பில் கால்நடை உரிமையாளருக்கு நிவாரண தொகை


கூடலூர் அருகே வனத்துறை சார்பில் கால்நடை உரிமையாளருக்கு நிவாரண தொகை
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனத்துறை சார்பில் கால்நடை உரிமையாளருக்கு நிவாரண தொகை

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே முரம்பிலாவு கிராமத்தை சேர்ந்த அம்சா என்பவரது மாட்டை கடந்த 31-ந் தேதி சிறுத்தை புலி தாக்கியது. இதில் மாடு உயிரிழந்தது. இதற்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் மற்றொரு மாடு காணாமல் போய் விட்டது. பல இடங்களில் தேடப்பட்டது. பின்னர் கடந்த 1 வாரத்துக்கு பிறகு உயிரிழந்த நிலையில் மாட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை புலி கடித்து மாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின் பேரில் 2-வதாக இறந்த மாட்டிற்கும் நிவாரணத் தொகையை கூடலூர் வனத்துறையினர் வழங்கினர்.


Next Story