வீடு பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி
வீடு பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகளை தாசில்தார் வழங்கினார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாட்டறம்பள்ளியை அடுத்த திரியாலம் கிராமத்தில் ரவி என்பவரின் மனைவி பரிமளா (வயது 30) என்பவரது குடிசை வீடு மழைகாரணமாக முழுவதும் சேதமடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் க. குமார் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். வருவாய் ஆய்வாளர் கவுரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதிரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அருணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story