ஊராட்சி செயலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
கொரோனா தொற்றால் இறந்த ஊராட்சி செயலர் குடும்பத்திற்கு நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைரமங்கலம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்த ரமேஷ்பாபு என்பவர், கொரோனா நோய்த்தடுப்பு பணியில் முன்களப்பணியாளராக செயல்பட்டு வந்தார். அப்போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி பணியின் போது அவர் இறந்தார். இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து, அரசு வழங்கிய நிவாரணத் தொகை ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story