வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
x

கொள்ளிடம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நாதல்படுகை கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நாதல்படுகை கிராமத்தில் புயல்-வெள்ள பாதுகாப்பு மையம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதேபோல முதலைமேடுதிட்டு கிராமத்தில் மற்றுமொரு புயல்-வெள்ள பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டப்படும். இந்த இரண்டு புயல்-வெள்ள பாதுகாப்பு மையங்களில் திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளும் வகையில் திருமண மண்டபமும் அதில் கட்டி கொடுக்கப்படும்.இ்வ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் முதலைமேடு திட்டு, வெள்ளமணல் மற்றும் அளக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அமைச்சர் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 816 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏ.க்கள்-அதிகாரிகள்

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (தணிக்கை) மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story