மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x

ஊட்டியில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆர்.டி.ஆ. அலுவலகத்தில், மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழிபாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன். எங்களிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்று உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கலெக்டர் அம்ரித் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story