வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
மாவட்டத்தில் 5 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விருதுநகர்,
மாவட்டத்தில் 5 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம்
அதன் விவரம் வருமாறு:-
காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் ராஜசேகரன், நரிக்குடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ விடுப்பில் உள்ள சத்திய சங்கர் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்குபணி புரிந்த சத்தியவதி, விருதுநகர் சிறுசேமிப்பு திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை
விருதுநகர் சிறுசேமிப்புத்திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சக்திவேல், நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பணியேற்று அந்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.