வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 32 பேனர்கள் அகற்றம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 32 பேனர்கள் அகற்றம்
x

வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 32 பேனர்கள் அகற்றப்பட்டன.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 32 பேனர்கள் அகற்றப்பட்டன.

வேலூர் மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பிறந்தநாள் விழா, கண்ணீர் அஞ்சலி, கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் ரத்தினசாமிக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்றும்படி மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் சுகாதார அலுவலர் முருகன் தலைமையிலான ஊழியர்கள் நேற்று வேலூர் கொணவட்டம், தொரப்பாடி, புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரேநாளில் 32 பேனர்கள் அகற்றப்பட்டன. அனுமதி பெறாமல் பேனர் வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story