குட்டையில் ஆகாயத்தாமரை அகற்றம்
நல்லூரில் குட்டையில் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.
நாமக்கல்
கந்தம்பாளையம்
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு மழை நீர் ஆதார குட்டையாக விளங்கி வந்தது. பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சியின் சார்பில் குட்டையை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக அந்த குட்டையில் மழைநீர் நிரம்பி உள்ளது. மேலும் குட்டையில் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து குட்டையை ஆக்கிரமித்து இருந்தது. இதையடுத்து ஊராட்சியின் சார்பில் ஆகாயத்தாமரை மற்றும் முட்பதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று முடிந்தன. தற்போது குட்டை முழுவதும் மழைநீர் நிரம்பி குளம்போல் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் மழைநீர் குட்டையை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story