ராசிபுரத்தில்15 பஸ்களில் பொருத்திய 'ஏர்ஹாரன்கள்' அகற்றம்


ராசிபுரத்தில்15 பஸ்களில் பொருத்திய ஏர்ஹாரன்கள் அகற்றம்
x
நாமக்கல்

ராசிபுரம்

அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகேசன், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர். அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரன்களை அகற்றினர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில், 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்.இ.டி. பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story