மாட்டுத்தாவணி அருகே அரசு நிலத்தில் கட்டுமானத்துக்கான தடை நீக்கம்


மாட்டுத்தாவணி அருகே அரசு நிலத்தில் கட்டுமானத்துக்கான தடை நீக்கம்
x

மாட்டுத்தாவணி அருகே அரசு நிலத்தில் கட்டுமானத்துக்கான தடையை நீக்கம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

மதுரை,

மாட்டுத்தாவணி அருகே அரசு நிலத்தில் கட்டுமானத்துக்கான தடையை நீக்கம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

அரசு நிலம்

மதுரை மாட்டுத்தாவணி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வேளாண் விளைபொருள் மற்றும் விற்பனை அங்காடி சார்பில் புதிய மார்க்கெட் அமைக்க கடந்த 2010-ம் ஆண்டில் முடிவானது. இதை எதிர்த்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, புதிய மார்க்கெட் அமைக்க இடைக்காலத் தடை விதித்தார்.

இந்த தடையை நீக்கக் கோரி மதுரை மாநகராட்சி கமிஷனர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தடை நீக்கம்

அதில், சம்பந்தப்பட்ட இடத்தில் டைடல் பார்க் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு கேட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் வேறு எந்த கட்டுமானமும் நடத்தக்கூடாது என்ற ஐகோர்ட்டு தடை விதித்து இருப்பதால் அந்த நிலத்தை வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.

முடிவில், சம்பந்தப்பட்ட இடம் தொடர்பான தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story