அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மணலூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஆக்கிரமித்து அமைத்திருந்த கொட்டகையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் மணலூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்படி நேற்று வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் நிறைமதி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கிராம உதவியாளர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொட்டகையை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அப்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க வடபொன்பரப்பி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Related Tags :
Next Story