அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கூர் அருகே அரசு இடத் தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை (என்.எச் 45.ஏ.) அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம், வீடு உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆக்கூர் அருகே மாமாகுடி ஊராட்சிக்குட்பட்ட அப்பராசபுத்தூர் பகுதியில் நான்கு வழி சாலை பணிக்காக வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக அப்பராசபுத்தூர் கிராமத்தில் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்கு சொந்தமான இடத்தை கை யகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சீர்காழி உதவி கலெ க்டர் அர்ச்சனா முன்னிலையில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த இடத்தை ஆக்கிரமித்தவர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து பொக்லின் எந்திரத்தின் மூலம் அங்கிருந்த வேலிகளை அகற்றப்பட்டு அரசுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது. அப்பகுதியில் 400- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பணியின் போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மணிமாறன், சந்திரா, சித்ரா , நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெ க்டர் செங்குட்டுவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story