ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விருதுநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சியினர் இணைந்து மெயின்பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட என்ஜினீயர்கள் முத்துச்சாமி, மணிகண்டன் மற்றும் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ரூபா ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விருதுநகர் மெயின் பஜாரில் கடைகள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த சாய் தளங்கள் இடித்து அகற்றப்பட்டன. சில இடங்களில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை கண்டறிவதற்கான குறிப்பிட்ட அளவீடு எதுவும் இல்லாத நிலையிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து மெயின் பஜாரில் சிறு கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.