ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கரூர்
புகழூர் தாலுகா விஸ்வநாதபுரி கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் கம்பி வேலி அமைத்து அடைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் மற்றும் சில இடங்களில் தென்னை மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் புகழூர் தாசில்தார் மோகன்ராஜிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் மனு கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் மண்டல துணை தாசில்தார் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றினார்கள். மேலும் அப்பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தென்னை மரம் மற்றும் பல்வேறு மரங்களை அகற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story