ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கருப்பத்தூர் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இந்தநிைலயில் வேங்காம்பட்டி பகுதியிலிருந்து பாலப்பட்டி செல்லக்கூடிய பாதை ஒன்றை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குறுக்கே கம்பி வேலி அமைத்திருந்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர். அப்போது, மண்டல துணை வட்டாட்சியர் இந்துமதி, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story