போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை பஸ் நிலையம், திருப்பத்தூர் சாலை, தியாகிகள் சாலை, வாடியார் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ஆணையாளர் சாந்தி தலைமையில், பில்டிங் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சேகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் சாலை விசாலமாக காட்சியளித்தது. மேலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Next Story