ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பழனியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
திண்டுக்கல்
பழனி காந்தி ரோட்டில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தில் திருவிழா காலங்களில் அறக்கட்டளைக்குரிய சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மண்டகப்படி நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த இடத்தின் முன்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த அறக்கட்டளை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, இடும்பன் கோவில் இணை ஆணையர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story