துறையூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
துறையூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருச்சி
துறையூர் பஸ்நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று துறையூர் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நகர விரிவாக்க ஆய்வாளர் பாலசுப்ரமணியன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் வெள்ளையன், சுகாதார ஆய்வாளர் முத்து முகமது ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பின் போது, அசம்பாவி சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story