பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Jun 2023 1:00 AM IST (Updated: 8 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பழனி நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

திண்டுக்கல்

பழனி அண்ணாநகர் பகுதியில் உழவர்சந்தை அமைந்துள்ளது. இங்கு தினமும் காலையில் ஏராளனமான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உழவர்சந்தை அருகே உள்ள சாலையோர பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகம் காணப்பட்டது. இதனால் அங்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் உழவர்சந்தை அருகே உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், உழவர்சந்தை விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி நகராட்சி சார்பில் நேற்று உழவர்சந்தை அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் வெற்றிசெல்வி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது சாலையோரத்தில் ஆக்கிரமித்து கடைக்காரர்கள் வைத்திருந்த பொருட்களை நகராட்சி பணியாளர்கள் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். இதற்கிடையே ஒரு சில வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். பின்னர் சாலையோர பகுதியை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story