பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
கோவில் குளம் ஆக்கிரமிப்பு
திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் முன்பு உள்ளது. இந்த குளத்தை ஆக்கிரமித்து ஒரு ஓட்டல் மற்றும் ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது.
இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நாகப்பட்டினம் இணை ஆணையர் நீதிமன்றம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அகற்றும் பணி
அதன்படி திருத்துறைப்பூண்டி மேட்டுத்தெரு பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன், பிறவி மருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் முருகையன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
இந்த பணியின்போது தாசில்தார் காரல்மார்க்ஸ், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் இருந்தனர்.